குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2021 1:42 AM IST (Updated: 9 Feb 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.

களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி மகாலிங்கம் (வயது 85). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மகாலிங்கத்தை தீவிரமாக தேடினர். இதுகுறித்து அவரது மனைவி ஆவுடையம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் இரவில் அங்குள்ள செட்டிமேடு குளத்தின் கரையில் அவரது துண்டு மட்டும் கிடந்ததை பார்த்தனர். இரவானதால் குளத்தில் இறங்கி தேட முடியாத நிலை காணப்பட்டது. இதற்கிடையே நேற்று காலை அவரது சடலம் குளத்தில் மிதந்தது. தகவல் அறிந்ததும், களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சடலத்தை கைப்பற்றி, அவர் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், காணாமல் போன மகாலிங்கம் என்பதும், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இறந்து போன மகாலிங்கத்திற்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story