நர்சிங் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கோர்ட்டில் உறவினர் சரண்


நர்சிங் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கோர்ட்டில் உறவினர் சரண்
x
தினத்தந்தி 9 Feb 2021 1:54 AM IST (Updated: 9 Feb 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

நர்சிங் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கோர்ட்டில் உறவினர் சரண்

பல்லடம், :-
பல்லடம் அருகேயுள்ள குப்புசாமிநாயுடுபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகள் தர்சினி (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் நர்சிங் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 21.12.2019-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு சூலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.  இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தர்சினியின் செல்போன் எண்ணுக்கு தாராபுரம் மணக்கடவை சேர்ந்த அவரது உறவினரான கோகுலகண்ணன் (25) என்பவர் அடிக்கடி  பேசி வந்தது தெரியவந்தது. தர்சினியின் தற்கொலை சம்பவத்தில் கோகுலகண்ணனுக்கு சம்பந்தம் இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். கோகுலகண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோகுலகண்ணன் பல்லடம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 19-ந்தேதி வரை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story