அரசு ஊழியர்கள் நூதன போராட்டம்; 13 பேர் கைது


அரசு ஊழியர்கள் நூதன போராட்டம்; 13 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2021 2:09 AM IST (Updated: 9 Feb 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர். இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று 7-வது நாளாக பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கூடினர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, நூதன போராட்டமாக நெற்றியில் நாமமிட்டும், கையில் சட்டி ஏந்தியும் சென்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Next Story