இளம்பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல்
பாளையங்கோட்டையில் இளம்பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
கொரோனா வைரஸ் பரவல் கடந்த 10 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது நெல்லையில் டெங்கு காய்ச்சல் தலைதூக்க தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டை சமாதானபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் சரோஜா அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட 23-வது வார்டு பகுதி முழுவதும் நேற்று காலை சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாளையங்கோட்டைமண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் ஆய்வாளர் முருகன், தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் 56 பேர் முகாமிட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story