மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுண் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் செய்யதுகாதர். இவருடைய மகன் செய்யது சமீர் (வயது 36). இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கவனத்திற்கு வந்ததால், இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய இவர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்றுக்கொண்டு, செய்யது சமீரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செய்யது சமீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறையில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story