மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 2:52 AM IST (Updated: 9 Feb 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகி நடராஜன் தலைமை தாங்கினார். இசக்கி பாண்டி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் வண்ணமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மின்வாரிய பணிகளை ஒப்பந்த முறையில் கொடுப்பதையும், மின்வாரிய வினியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story