2-வது நாளாக தேடும் பணி
ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி நடந்தது.
செம்பட்டி:
செம்பட்டி அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்த கமலகண்ணன் மகன் கவுதம் (வயது 19).
இவர் பழனியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கவுதம், அவரது சித்தப்பா சேகருடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றார்.
அப்போது, அவர் எதிர்பாராமல் நீரில் மூழ்கினார். தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது, அணையில் 22 அடி தண்ணீர் இருப்பதால், நீரில் மூழ்கிய அவரை ேதடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று 2-வது நாளாக அவரை தேடும் பணி நடந்தது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அணைக்கு நேரில் சென்ற தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீரில் மூழ்கி கவுதமை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story