விபத்தில் முதியவர் பலி: கல்லூரி பஸ் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை


விபத்தில் முதியவர் பலி: கல்லூரி பஸ் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 9 Feb 2021 4:08 AM IST (Updated: 9 Feb 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் முதியவா் பலியான வழக்கில் கல்லூாி பஸ் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோபி கோா்ட்டு தீர்ப்பு கூறியது.

விபத்தில் முதியவர் பலி:
கல்லூரி பஸ் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை
கோபி கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் முதியவா் பலியான வழக்கில் கல்லூாி பஸ் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோபி கோா்ட்டு தீர்ப்பு கூறியது.
விபத்தில் முதியவா் பலி
கோபி அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 70). இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அன்று கோபி சத்தி மெயின் ரோட்டில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பஸ் முருகசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகசாமி இறந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக கல்லூரி பஸ் டிரைவர் சுப்புராஜ் (26) என்பவரை கைது செய்தனர்.
2 ஆண்டுகள் சிறை
இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக கோபி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு் எண் 2-ல் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விஸ்வநாத், அதில் குற்றம் சாட்டப்பட்ட சுப்புராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story