கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை மருத்துவகல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி
பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி
பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவ- மாணவிகள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தனர். கடந்த 2 நாட்களாக மாணவ- மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலின் வெளிப்புறம் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உள்ளிருப்பு தர்ணா
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவ- மாணவிகளை நேரில் சந்தித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
இதில் மாணவ- மாணவிகள் சமாதானம் அடைந்தனர். எனினும் மாணவ- மாணவிகள் தரப்பில், ‘கல்லூரிக்கு வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடாமல், கல்லூரி வளாகத்துக்குள் உட்கார்ந்து போராட்டம் நடத்தப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் நேற்றும் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் கல்லூரி வளாகத்துக்குள் தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story