மயிலாப்பூர் நகை கடையில் 30 கிலோ வெள்ளிக்கட்டி திருட்டு - தப்பி ஓடிய ஊழியர் கைது


மயிலாப்பூர் நகை கடையில் 30 கிலோ வெள்ளிக்கட்டி திருட்டு - தப்பி ஓடிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2021 4:23 AM IST (Updated: 9 Feb 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூரில் நகை கடையில் 30 கிலோ வெள்ளிக்கட்டியை திருடிவிட்டு தப்பி ஓடிய ஊழியரை ராஜஸ்தான் மாநிலத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் வெங்கடாசலம் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் ரோஷன்குமார். இவரது கடையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்த ஊழியர் சேட்டன்சிங் (வயது 24) என்பவர் 30 கிலோ வெள்ளி கட்டிகளை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக ரோஷன்குமார் மயிலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

30 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருடிக்கொண்டு தப்பி ஓடிய சேட்டன்சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் பதுங்கி இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதன்பேரில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று, குற்றவாளி சேட்டன்சிங்கை கைது செய்தனர். அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். சவுகார்பேட்டையில் உள்ள தனக்கு தெரிந்த நபரிடம் 13 கிலோ வெள்ளி கட்டிகளை கொடுத்து வைத்திருந்தார்.

அந்த 13 கிலோ வெள்ளி கட்டிகள் மீட்கப்பட்டது. மீதி 17 கிலோ வெள்ளிக்கட்டிகளை தனது உறவினர்கள் மூலம் விற்பனை செய்து விட்டதாக சேட்டன்சிங் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அந்த வெள்ளிக்கட்டிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story