பச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம்


பச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 9 Feb 2021 4:44 AM IST (Updated: 9 Feb 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

பச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

பச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் பூஜையில் வைக்கப்பட்ட
ஒரு தேங்காய் ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம்
தேங்காய்
ஊஞ்சலூர் அருகே பச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி ஆகியவை கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம் 
பின்னர் 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. 6-ந் தேதி இரவு கோவிலில் மறுபூஜை நடைபெற்றது. அன்று அம்மன் மடியில் பூஜைக்கு வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு தேங்காயை ஏலம் எடுத்தனர். இதில் பக்தர் ஒருவர் அந்த தேங்காயை ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

Next Story