10 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்வமாக சென்ற மாணவ-மாணவிகள்


10 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்வமாக சென்ற மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 9 Feb 2021 4:44 AM IST (Updated: 9 Feb 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

10 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமாக சென்றனர்.

10 மாதங்களுக்கு பிறகு
பள்ளி, கல்லூரிகளுக்கு ஆர்வமாக சென்ற மாணவ-மாணவிகள்
10 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமாக சென்றனர்.
பள்ளி, கல்லூரி திறப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து, கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு, பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதேபோல் கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆர்வமாக தங்களது கல்வி நிறுவனத்தை நோக்கி படை எடுத்தனர்.
மகிழ்ச்சி
நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த நண்பர்கள், தோழிகளை மாணவர்கள் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்தபடி வந்தனர்.
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை விட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு பெஞ்சில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சுமார் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்களது கல்வி நிறுவனங்களுக்கு சென்றது புத்துணர்வு அளிப்பதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

Next Story