தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது, திருவெறும்பூர் தாலுகா பெரிய சூரியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆரோக்கியசாமி என்பவர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், பெரிய சூரியூர் அந்தோணியார் கோவில் தெருவில் சாலை அமைப்பதற்கான பொது இடத்தை 21 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. துறையூர் தாலுகா கொப்பம்பட்டி ராஜபாளையம் புதுப்பாலம் கிராமத்தில் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் மனு கொடுத்தனர். குழுமணி பக்கம் உள்ள பேரூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரேவதி, அவரது உறவினரான பார்வையற்ற கஸ்தூரி ஆகியோர் தாங்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டும், அந்த இடத்தை காலி செய்யும்படி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறி சமையல் செய்யும் நோக்கத்தில் வந்திருந்ததால் அவர்கள் வைத்திருந்த விறகு பாத்திரங்களையும் கைப்பற்றி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story