மணப்பாறை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மறியல்


மணப்பாறை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2021 5:43 AM IST (Updated: 9 Feb 2021 5:46 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை, வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். சமீப நாட்களாக அந்த பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் தெரியப்படுத்தியும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. தற்போது பள்ளி-கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதால் இந்த பஸ்சை நம்பியுள்ள மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, சரியான நேரத்திற்கு பஸ் இயக்கக்கோரி நேற்று மாலை மணப்பாறை பஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பஸ்சின் பின் பகுதியில் தரையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களிடம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story