திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Feb 2021 5:55 AM IST (Updated: 9 Feb 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், சரக்கு ஏற்ற ஆள் இல்லாமல் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. 

இதுகுறித்து மாநகர லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது:-

கடந்த 6-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் அவரது தலைமையில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென்று நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 முதல் 90 லாரிகள் வரை சரக்கு ஏற்ற ஆளில்லாமல் பொருட்கள் தேங்கி கிடக்கிறது என்றார்.

Next Story