தேவூர் அருகே வைக்கோல் ஏற்றிய லாரி தீப்பிடித்து எரிந்தது


தேவூர் அருகே வைக்கோல் ஏற்றிய லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 9 Feb 2021 8:02 AM IST (Updated: 9 Feb 2021 8:04 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே, மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் பாரத்துடன் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தேவூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). லாரி உரிமையாளர். இவர் தேவூர் அருகே வட்ராம்பாளையம் பகுதியில் வைக்கோல் வாங்கி லாரியில் ஏற்றினார். பின்னர் லாரி ஓமலூர் பச்சானூர் பகுதிக்கு செல்ல புறப்பட்டது.
சென்றாயனூர் பனங்காடு வழியாக சென்றபோது அப்பகுதியில் சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் லாரியில் இருந்த வைக்கோல்  உரசியதில் தீ பிடித்தது.

இதனை அறிந்த அப்பகுதி கிராமமக்கள் சத்தம் போட்டு லாரி டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து லாரியை டிரைவர் நிறுத்தினார். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பிடித்து கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதனால் அருகில் உள்ள கரும்பு ஆலை மற்றும் கரும்புத் தோட்டம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பொன்னுசாமி, தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Next Story