பாலமலையில் காட்டுத்தீ - தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி


பாலமலையில் காட்டுத்தீ - தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி
x
தினத்தந்தி 9 Feb 2021 8:04 AM IST (Updated: 9 Feb 2021 8:09 AM IST)
t-max-icont-min-icon

பாலமலையில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

எடப்பாடி,

பூலாம்பட்டியை அடுத்து ஈரோடு-சேலம் மாவட்டத்திற்கு இடையே பாலமலை உள்ளது. இங்கு சித்தேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பூலாம்பட்டியை அடுத்த நெருஞ்சிப்பேட்டையில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடையாக 7 மலைகளை தாண்டி செல்ல வேண்டும். 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பாலமலை முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பாலமலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

விஷமிகள் யாராவது தீ வைத்தனரா, அல்லது தானாகவே தீப்பிடித்ததா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமலையில் எரிந்த தீ பூலாம்பட்டி காவிரி ஆற்றின் நீரில் எதிரொலித்தது.

Next Story