மதுரையில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் நகர் பகுதியையும், 2 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று சிகிச்சை முடிந்து 12 பேர் வீடு திரும்பினார்கள். இதில் 10 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் சேர்ந்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 459 ஆக உள்ளது.
Related Tags :
Next Story