விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 தாசில்தார்கள் இடமாற்றம்


விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:30 AM IST (Updated: 9 Feb 2021 9:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், 

திருச்சுழி தாசில்தார் தன்ராஜ், அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் டாஸ்மாக் மேலாளர் மாதா, விருதுநகர் டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலர் பாண்டி சங்கர் ராஜ், விருதுநகர் நில எடுப்பு தாசில்தாராக மாற்றம் பெற்றுள்ளார்.

சிப்காட் தனிதாசில்தார் பால்ரத்தினராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சரஸ்வதி விருதுநகர் நில எடுப்பு தாசில்தாரராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
தனி தாசில்தார் குயிலி, விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் ஆகவும், திருச்சுழி தனி தாசில்தார் ஷாஜகான், விருது நகர் சிப்காட்டில் நிலஎடுப்புதனி தாசில்தாராகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தாசில்தார் வள்ளி, விருதுநகரில் நில எடுப்பு தாசில்தாரராகளும், சிவகாசி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் உமாமகேஸ்வரி மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், சிவகாசி கோட்ட கலால் தாசில்தாரராகவும், சிவகாசி கோட்ட கலால் அலுவலர் கிருஷ்ணவேணி அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலராகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நில எடுப்பு தனி தாசில்தார் மாரிமுத்து, சிவகாசி நில எடுப்பு தாசில்தாராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இரண்டு கட்டங்களாக இதுவரை 27 தாசில்தார்கள் 
மாற்றப்பட்டுள்ளனர். 

Next Story