ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு


ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு
x
தினத்தந்தி 9 Feb 2021 10:12 AM IST (Updated: 9 Feb 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி மேல் வரிசை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 40). இவர் கீழரத வீதி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க சென்றார். 

அப்போது அவர் கார்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சரியாக நுழையவில்லை. இந்தநிலையில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த முக கவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார். 
பின்னர் லட்சுமியிடம் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு லட்சுமியின் கார்டை வாங்கி அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்தார். ஆனால் லட்சுமியிடம் உங்களது கணக்கில் இருந்து பணம் வரவில்லை என கூறிவிட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

இதனை நம்பிய லட்சுமியும் வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு தான் தனது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்  நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story