கோவை மாநகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கோவை மாநகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராதததை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ-. தலைமை தாங்கி பேசுகையில், கோவை மாநகரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும். குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் மணி, வக்கீல் அருள்மொழி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story