ராஜபாளையத்தில், புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


ராஜபாளையத்தில், புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 9 Feb 2021 10:57 AM IST (Updated: 9 Feb 2021 11:10 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ராஜபாளையம், 

ராஜபாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஆகிய 3 பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன. 
ரெயில்வே மேம்பால பணிகள் தற்காலிகமாக நடைபெறாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முழுமை அடையாமல் தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் தற்போது காந்தி கலை மன்றத்தில் இருந்து சத்திரப்பட்டி சாலை ெரயில்வே கேட் வரை சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதனால் அந்த பகுதி முழுவதும் புழுதிகள் நிறைந்து காணப்படுகிறது. புழுதி நிறைந்த சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 
இதிலிருந்து ராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை மட்டுமே தற்போது தப்பியுள்ளது. 

நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள் முழுவதும் குழிதோண்டி மக்களின் அன்றாட பணிகள் செய்வதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்நகருகென்று தனியாக மாற்று வழி சாலை கிடையாது. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ற சாலை வசதி இல்லை. 

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பணிகளை விரைந்து முடிந்து புதிய தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story