கீரமங்கலம் அருகே, விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கீரமங்கலம் அருகே திருமணமாகி குழந்தை இல்லை என்ற விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துக்கொண்டார்.
கீரமங்கலம்,
கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 33). விவசாயி. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இல்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story