கோதையாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கோதையாறு பகுதியில் சிறுத்தை நடமாடியதாக வெளியான தகவல் பொதுமக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
குலசேகரம்,
குமரி மாவட்டம் கோதையாறு நீர்மின் நிலைய அணை அருகில் செங்குத்தான அடர்ந்த காட்டுப் பகுதியாக இருக்கும். இந்த பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குச் சரிவாகும்.
இங்கு ஏராளமான சிற்றருவிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் பழங்குடியின மக்கள், மின்வாரிய ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் சிலரும் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மின்சார ஊழியர் ஒருவர், அந்த பகுதியில் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அதில் சிறுத்தை நடந்து சென்றது பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story