மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி
மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது
ராமநாதபுரம், பிப்.9-
ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி விளையாட்டு அரங்கில் சென்னை ஏசஸ் ஸ்கூல் ஆப் பேட்மிட்டன் மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி நடைபெற்றது. முதல் நாளில் 10,13,17,21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளும், இரண்டாவது நாளன்று 30 மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டிகளும் நடைபெற்றது. ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் சசிகுமார் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை பரமக்குடியை சேர்ந்த அன்வர் ராஜா மற்றும் மரிய ஜோசப் பெற்றனர்.
மற்றொரு பிரிவு போட்டியில் பரமக்குடியை சேர்ந்த கல்யாண்குமார் மற்றும் கந்தவேல் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை பரமக்குடியை சேர்ந்த அன்வர்ராஜா மட்டும் மோகன் பெற்றனர். இதைதொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கலந்து கொண்டு பேசியதோடு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, தொழிலதிபர் தினேஷ்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் ஷேக் அப்துல்லா, சாதிக் அலி அப்துல்மாலிக், பரமக்குடி ரோட்டரி சங்க தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான், தொழிலதிபர் உறுமணன், வழக்கறிஞர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story