இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 12:23 PM IST (Updated: 9 Feb 2021 12:23 PM IST)
t-max-icont-min-icon

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

ராமநாதபுரம்
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்த போவதாகவும், எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க போவதாகவுமான மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து முதற்கட்ட போராட்டமாக இந்தியா முழுவதும் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் பிரேமலதா தலைமை தாங்கினார். முதல்நிலை அதிகாரிகள் சங்க  ஈஸ்வரன் வரவேற்றார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பாக ராஜேந்திர பாண்டியன் பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கிளை செயலாளர் முத்துப்பாண்டி ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசும் போது, எல்.ஐ.சி. தேச வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்து வருவதோடு 40 கோடிக்கும் மேலான பாலிசிதாரர்களுக்கு பலனை அளித்து வருகிறது. எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்றால் தேச வளர்ச்சி பெரிதும் பாதிக்கும். பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் பங்குதாரர்களுக்கு போய் சேரும். எனவே மத்திய அரசின் புதிய கொள்கைக்கு எதிராக பாலிசிதாரர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள், ஊழியர்கள் என கூட்டாக இணைந்து போராட முடிவு செய்துள்ளோம் என கூறினார். முடிவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் சேசு நன்றி கூறினார்.

Next Story