வடகாட்டில் மின்னொளி கைப்பந்து போட்டி
வடகாட்டில் மின்னொளி கைப்பந்து போட்டி
வடகாடு:
வடகாடு பாப்பாமனையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடந்தது. இதில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், கரூர், கோயம்புத்தூர், அறந்தாங்கி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, தமிழ்நாடு காவல்துறை அணி உள்பட 24 அணிகள் கலந்து கொண்டது. 7 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகள் 2 நாட்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வடகாடு தர்மசாஸ்தா அணியினர் முதல் பரிசை தட்டிச்சென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் ரொக்கப்பணம் மற்றும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. 2-ம் பரிசை பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணிக்கு ரூ.12,500 மற்றும் நினைவு கோப்பையும், 3-வது பரிசை பெற்ற வடகாடு மணிமாறன் நினைவு அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் நினைவு கோப்பையும், 4-வது பரிசை பிடித்த மதுரை சாரல் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் நினைவு கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டிகளை காண வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாப்பாமனை பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story