விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 5:01 PM IST (Updated: 9 Feb 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.600 வழங்கிடக கோரி தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முத்தையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இதில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலையும், குறைந்தபட்ச கூலி தினசரி ரூ.600-ம் வழங்க வேண்டும். முதல்- அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தி முறையாக செயல்படுத்த வேண்டும். 

அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பொது வினியோக முறையை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Next Story