கலவை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
கலவை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கலவை
கலவை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள சென்னலேரி, பரிக்கல்பட்டு, கலவை, கோடாலி ஆகிய பகுதியில் உள்ள தோப்பு, புறம்போக்கு, அனாதினம் போன்ற இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வருகின்றனர்
இவர்கள் கலெக்டரிடம் வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அதன்பேரில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் சென்னலேரி கிராமத்தில் தோப்பு புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வரும் இடத்தை நேரில் பார்வையிட்டார்.
மேலும் பரிக்கல்பட்டு, கலவை பகுதியில் உள்ள அனாதினம ்இடத்தையும் பார்வையிட்டார்.
அப்போது கலவை தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story