நீடாமங்கலம் அருகே கூரை வீடு,பெட்டிக்கடை தீயில் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்


நீடாமங்கலம் அருகே கூரை வீடு,பெட்டிக்கடை தீயில் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:36 PM IST (Updated: 9 Feb 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

கூரை வீடு,பெட்டிக்கடை தீயில் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடு ஊராட்சி நீடாமங்கலம்- மன்னார்குடி சாலை பகுதியை சேர்ந்்த தங்கராசு மகன் பாலுமகேந்திரன் என்பவருடைய கூரை வீடு மற்றும் பெட்டிக்கடையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதில் கூரை வீடு மற்றும் கடை முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் மணிமன்னன், ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் ரஷ்யா அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 ஆயிரம் நிதி உதவி, 25 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கினர். கூரை வீட்டின் மேல் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகள் ஒன்றோடொன்று உரசியதால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story