கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரிக்கை
கோவில்பட்டியில், மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கழுதையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில், மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கழுதையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள மங்கள விநாயகர் கோவில் சந்திப்பு தொடங்கி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தி செப்பனிட வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நடப்பாண்டு சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மந்தித்தோப்பு சாலையில் நடந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தி செப்பனிட பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கழுதையிடம் மனுக்களை வழங்கினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். இதில், தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், நகர துணை செயலாளர்கள் அலாவுதீன், முனியசாமி, நகர குழு உறுப்பினர் ஜோசப், கிளை செயலாளர்கள் ரங்கநாதன், சுரேஷ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story