ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2021 10:37 PM IST (Updated: 9 Feb 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ஓட்டப்பிடாரம்:
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆலய திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்தள்ளது. திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. 
திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும மாலை திருப்பலி நடந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் என்றாலும், அனைத்து சமயத்தினரும் வழிபடும் தலமாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது.
திருப்பலி 
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டால் குணமாகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான நேற்று காலை 4.30, 6, 7.30 மணிக்கு திருப்பலி நடந்தது. திருவிழா திருப்பலி 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் நடந்தது. திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி மற்றும பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 
சப்பர பவனி
முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடந்தது. அப்போது பக்தர்கள் நேமிக்க கடனாக உப்புயை தூவி இறைமக்கள் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது பலர் குழந்தைகளை விற்று வாங்கினார்கள். ஆலய விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர். இன்று(புதன்கிழமை) காலை 4.30 மணிக்கு அலவந்தான்குளம் பங்கு தந்தை தலைமையில் நன்றி திருப்பலியும், இதனை தொடர்ந்து ஆலங்குளம் பங்கு தந்தை அருள்ராஜ் தலைமையில் கொடியிறக்கம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மரிய பிரான்சிஸ், ஆன்மீக பங்கு தந்தை சகாயநாதன், உதவி பங்கு தந்தை அல்போன்ஸ் பவுல்ராஜ் மற்றும் ஆலய இறைமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Next Story