5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 9 Feb 2021 11:00 PM IST (Updated: 9 Feb 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு  மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மீன்பிடிக்க செல்லவில்லை
அதன்படி நேற்று சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் மக்கள்  நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story