விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியை 200 நாட்களாக உயர்த்தி வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தி முறையாக செயல்படுத்த வேண்டும், அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், 58 வயதான விவசாய தொழிலாளர் அனைவருக்கும் நிபத்தனையின்றி ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அரசு புறம் போக்கு இடத்தில் விவசாயம் செய்து வரும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலபட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பபட்டன.
Related Tags :
Next Story