மொபட்டில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து பலி
மொபட்டில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை(வயது 55). இவர் வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் தனது மொபட்டில் நேற்று முன்தினம் இரவு காருகுடியில் இருந்து பெருமத்தூர் செல்லும் சாலையில் பெருமத்தூர் வளைவு அருகே சென்றார். அப்போது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் மொபட்டுடன் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரையின் தம்பி இறந்து 30 நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது துரையும் இறந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story