அரசு ஊழியர் சங்கத்தினர் 9-வது நாளாக மறியல்
அரசு ஊழியர் சங்கத்தினர் 9-வது நாளாக மறியல்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும், அரசு பணியில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும், அரசுத்துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசுத்துறையில் பணியாற்றிவரும் சத்துணவு அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கருப்பையா தலைமையில் தொடர்ந்து 9-வது நாளாக புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் திருமயம் செல்லும் சாலையில் சாலை மறியல் செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story