பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அய்யாத்துரை என்கிற ஞானபிரகாசம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 11 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் கேட்டுள்ளார். சிறுமி தண்ணீர் கொடுத்தபோது, அவளுக்கு ஞானபிரகாசம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டப்படி வீட்டை விட்டு வெளியே ஓடினார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவர் ஞானபிரகாசத்தை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story