காரைக்குடி,
காரைக்குடி நகரின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், காந்தி திடல் பகுதியில் நீண்டகாலமாக அப்புறப்படுத்தாமல் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியும் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமையில் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு குப்பைகளை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுகாதார சீர்கேடு குறித்து எழுதப்பட்ட வாசகங்களை பதாகையில் ஏந்தி ேகாஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார், செயலாளர் ஆறுமுகம் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.