குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
குமாரபாளையம்:
தனியார் துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம்
தனியார் துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு காந்திநகர் கிளை செயலாளர் சின்னராசு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ரங்கசாமி, முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
போலீஸ் பாதுகாப்பு
இதில் அஸ்கர், சண்முகம், மங்கலமேரி, பாண்டியம்மாள், வீரமணி உட்பட 32 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்திற்குள் நுழையாதவாறு குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story