நெல்லையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
நெல்லையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து நேதாஜி நகரை சேர்ந்தவர் மதன் (வயது 21) இவர் நேற்று தனது காரில் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்தார். அவர் பெருமாள் மேலரதவீதி பகுதியில் தனது காரை நிறுத்தி இருந்தார். மாலை சுமார் 4 மணியளவில் காரின் முன்பக்கம் திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்தது. தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story