நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், அந்த அமைப்பினர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாநகராட்சி மைய அலுவலக நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் கண்ணனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு சங்கரன்கோவில் ரோடு ராஜாஜிபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் குடியிருக்கும் பகுதியில், விவசாய நிலத்தில் தனியார் மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை அருகில் உள்ள ஓடையில் எண்ணெய் கலந்த கழிவுநீர் விடப்படுவதால் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதி மக்களும் சுவாச கோளாறு பிரச்சினையால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே பொது மக்களுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் மோகன்தாஸ், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் பிரசாந்த், மாநில வக்கீல் அணி பிரபுஜீவன், தி.மு.க. நிர்வாகி செண்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story