ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் வண்ணார்பேட்டை மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் மீது ஆய்வு என்ற பெயரில் போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கெடுபிடிகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நடராஜன், முகமது அலி தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன் தொடங்கி வைத்து பேசினார். அரசு போக்குவரத்து சங்க பொது செயலாளர் ஜோதி, பெருமாள், ராஜசேகர் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஆட்டோ டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story