கடலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் எண்ணிக்கை அங்கு சேர்க்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 8 பேருக்கு பாதிப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
இவர்களில் சென்னையில் இருந்து குறிஞ்சிப்பாடி வந்த ஒருவருக்கும், சளி, காய்ச்சல், இருமலால் பாதித்த காட்டு மன்னார்கோவிலை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 646 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 11 பேர் குணமடைந்து சென்றனர்.
கொரோனா பாதித்த 40 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 28 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 473 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Related Tags :
Next Story