மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 8:12 PM GMT (Updated: 9 Feb 2021 8:12 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி வழங்கவும், தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியும் தாலுகா அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் தாலுகா தலைவர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் லட்சுமணன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஞானமுத்து, கோபால், தாலுகா துணைத் தலைவர் குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், நிர்வாகிகள் ராமச்சந்திரபாபு, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். காலை 11 மணியிலிருந்து மாலை வரையிலும் மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story