திருப்பரங்குன்றம் யூனியன் கமிஷனரை கண்டித்து போராட்டம்
திருப்பரங்குன்றம் யூனியன் கமிஷனரை கண்டித்து போராட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து நேற்று முன்தினம் யூனியன் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதற்கான வேலை தொடங்குவதற்கு பணி உத்தரவு வழங்கப்படவில்லை என்று கூறி சிலர் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கமிஷனர் இருக்கைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மாலை திடீரென்று ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமையில் கவுன்சிலர்கள் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திட்டப்பணிகள் மற்றும் வரவு, செலவு கணக்கில் நடக்கும் முறைகேடு கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தகவலறிந்த திருநகர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ஒன்றிய தலைவர் வேட்டையன், துணைத் தலைவர் இந்திரா, கவுன்சிலர்கள் சுமதி, மணிமாறன் உஷாராணி, பஞ்சாட்சரம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஜெயக்குமார், செல்வம் குமரேசன் ஆகிய 9 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story