வேன் கவிழ்ந்து காயமடைந்த பெண் சாவு


வேன் கவிழ்ந்து காயமடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 Feb 2021 1:46 AM IST (Updated: 10 Feb 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்

பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குன்னத்தூரில் கடந்த 30-ந் தேதி ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவிற்கு பேரையூர் அருகே உள்ள பெரியபூலாம்பட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மினி வேனில் சென்றனர். அப்போது வேன் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அதில் இருந்த 26 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதில் பொன்னுமாரி(வயது70) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story