கடலூாில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்- 60 போ் கைது
கடலூாில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 60 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.
இதையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசு ஊழியர் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story