21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்


21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 10 Feb 2021 1:49 AM IST (Updated: 10 Feb 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் ஐ பிரிவு உதவியாளர் அழகு பிள்ளை, விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தலைமை உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தலைமை உதவியாளர் திருப்பதி, சாத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆகவும், சாத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ் வெம்பக்கோட்டை துணை தாசில்தாராகவும், வெம்பக்கோட்டை துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரர், சிவகாசி துணை தாசில்தாராகவும், சிவகாசி தனி துணை தாசில்தார் கார்த்திக்ராஜ் வத்திராயிருப்பு வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
வத்திராயிருப்பு வழங்கல் அலுவலர் பாலமுருகன், வெம்பக் கோட்டை மண்டல துணை தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளார். 
வெம்பக்கோட்டை மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் ஆகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை, ராஜபாளையம் மண்டல துணை தாசில்தாரராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
ராஜபாளையம் மண்டல துணை தாசில்தார் விஜிமாரி, சிவகாசி தலைமையிடத்து துணை தாசில்தாரராகவும், சிவகாசி தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜாமணி,  சாத்தூர் தனித்துணைதாசில்தாராகவும், சாத்தூர் தனித்துணை தாசில்தார் நாகேஷ், அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ஆகவும் அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் விருதுநகர் ஐ பிரிவு தலைமை உதவியாளராகவும், சிவகாசி தனி துணை தாசில்தார் பஞ்சவர்ணம் வெம்ப கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், வெம்ப கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் சிவானந்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் தனம் சிவகாசி வட்டவழங்கல் அலுவலராகவும், காரியாபட்டி மண்டல துணை தாசில்தார் ராஜீவ் காந்தி, சாத்தூர் மண்டல துணை தாசில்தார் ஆகவும், சாத்தூர் மண்டல துணை தாசில்தார் சோனையன் அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தாராகவும், அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் பால்ராஜ் காரியாபட்டி மண்டல துணை தாசில்தாராகவும் விருதுநகர் சிப்காட்டில் உள்ள சுந்தரமூர்த்தி, விருதுநகர் பறக்கும் படை துணை தாசில்தாராகவும், வத்திராயிருப்பு தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கம்மாள் மீண்டும் அந்த இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story