கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.


கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
x
தினத்தந்தி 10 Feb 2021 1:55 AM IST (Updated: 10 Feb 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் முதுநகர், 
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனக்குப்பம், தாழங்குடா, சித்திரை பேட்டை, ராசா பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆழ் கடலுக்கு சென்ற கடலூர் துறைமுக பகுதி மீனவர்களுக்கு குறைந்த அளவிலான மீன்களே அவர்களது வலையில் சிக்கியது. 

இது தவிர நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கடலூர் துறைமுகம் பகுதி மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.ஒரு சில பைபர், விசைப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கடலூர் துறைமுக பகுதி மீன்களின் வரத்து குறைந்து பொலிவிழந்து காணப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காண  முடிந் தது.

Next Story