முன்னாள் ராணுவ வீரர் குத்தி படுகொலை
விருதுநகர் அருகே ஆடு திருட வந்தவர் அவரை விரட்ட முயற்சித்த முன்னாள் ராணுவ வீரரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே ஆடு திருட வந்தவர் அவரை விரட்ட முயற்சித்த முன்னாள் ராணுவ வீரரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). முன்னாள் ராணுவ வீரரான இவர் சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று செல்வகுமார் வீட்டில் இருந்த போது வீட்டு தொழுவத்தில் அதே ஊரை சேர்ந்த நாட்டார்மங்கல தெரு பாலகிருஷ்ணன் (44) என்பவர் ஆடு திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது செல்வகுமார் அவரை சத்தம் போட்டு விரட்டிவிட்டார்.
குத்திக்கொலை
இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் பாலகிருஷ்ணன், செல்வகுமார் வீட்டிற்கு ஆடுதிருட வந்தபோது வீட்டில் இருந்த செல்வகுமார் தொழுவத்தில் சத்தம் கேட்டு அங்கு வந்த போது பாலகிருஷ்ணன் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது பாலகிருஷ்ணன், செல்வகுமாரை கத்தியால் குத்தினார். செல்வகுமாரின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது தாயார் செல்வி அங்கு ஓடி வந்தார்.
அப்போதும் பாலகிருஷ்ணன், செல்வகுமாரை மீண்டும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக செல்வி தனது உறவினர்கள் உதவியுடன் செல்வகுமாரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆமத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Related Tags :
Next Story